Monday, July 12, 2010

ஞாபகம் வருதே!

இன்று பாடகர் கிருஷ்ண சந்த்திரனின் பேட்டி தேன் கிண்ணம் (ஜெயா டி வி) நிகழ்ச்சியில் பார்க்கும் போது அவர் சொன்ன ஒரு கருத்து நாம் (-நாற்பது-ஐம்பதுகளில் இருப்பவர்கள்) எல்லோரும் அடிக்கடி தினசரி வாழ்க்கையில் ஒரு சிறிய அதிர்ச்சியுடன் நினைத்துக் கொள்வதுதான்.

அதாவது புதுப்பாடல் ரீமிக்ஸ் செய்ய அங்கிருந்த கலை ஞர்களிடம் ஐடியா கேட்ட போது இருபதுகளில் இருக்கும் ஒருவர் 'ஏதோ மோகம்' பாடலை தேர்ந்தெடுக்கலாமா என்று கூறவும் ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்பட்டதாம் அவருக்கு-ஏனென்றால் அது அவர் பாடிய முதல் பாடல் 1982-வில்! ஓ நாம் பாடிய பாட்டே பழைய பாடல் ஆகி விட்டது என்றால் நமக்கு வயசாகி விட்டது-அடுத்த தலை முறை நமக்கு சமமாக ஆலோசிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்று உறைக்க ஆரம்பித்த ஒரு தருணம் என்றார்.

இதுபோல் எங்ககள் இருவருக்கும் அடிக்கடி ஏற்படுகிறது. ஏனென்றால் வயதானவர்களைப் பற்றி குறிப்பிடும் போது 'அவருக்கு ஒரு 50-60 வயது இருக்கும்' என்று ரொம்ப சாதாரணமாக சொல்லி விடுகிறோம்! நாங்கள் இருவருமே 50-60 களின் ஆரம்பத்தில் இருக்கிறோம் என்பதே எங்களுக்கு அடிக்கடி மறந்து போய் விடுவது தான் காரணம்!